• Apr 20 2024

ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பெறுமதியான பரிசுகள்- இதென்ன புதுடுவிஸ்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. தமிழ் ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படமும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது.

இதில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டாலும், டாம் 5 பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் ரூ. 1 கோடி மதிப்பிலான பரிசுப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசுப் பெட்டிக்குள் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகள் டாப் 5 பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பரிந்துரை செய்யப்பட்ட மொத்தம் 26 பேர் இந்தப் பரிசைப் பெற்றுள்ளார்கள்.


இந்தப் பரிசுப் பொருட்கள் ஆஸ்கர் விருது வழங்கும் அக்கடமியால் கொடுக்கப்படுபவை அல்ல. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயங்கிவரும் டிஸ்டின்க்டிவ் அசெட்ஸ் (Distinctive Assets) என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் Everyone Wins என்ற பெயரில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட எல்லோருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறது. 

பரிசுத் தொகுப்பில் அறுபதுக்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பல விதமான அழகு சாதனங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக கனடியன் எஸ்டேட்டில் உல்லாச சுற்றுலா செய்ய 32.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயண டிக்கெட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 8 பேர் இத்தாலிய லயிட் ஹவுஸ் சுற்றுலா சென்றுவரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 7.3 லட்சம் ரூபாய்.


இந்த பரிசுப் பொருட்களை கொடுக்கும் பெட்டியும் மதிப்பு மிக்கதாகும். அந்த வகையில் ஹவாய்னாஸ் சூட்கேஸில் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருட்களில் பாதி பெண்கள் மற்றும் சிறுபான்மையினரால் தயாரிக்கப்பட்டவை  ஆகும்.


இந்தப் தொகுப்பில் உள்ள பொருட்கள் பரிசாகக் கிடைத்தாலும் இவற்றைப் பெற்றுக்கொள்பவர்கள் அனைத்து பொருட்களுக்கும் அந்தந்த நாடுகளுக்கு உரிய வருமான வரிசையைச் செலுத்த வேண்டியது இருக்கும் என்பதும் கவனிக்கவேண்டிய செய்தி.

Advertisement

Advertisement

Advertisement