• Sep 30 2023

அடடேய்...ஜெயிலர் படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா?வெளியான தகவல் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். 


முதன்முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத் காம்போ, ஜெயிலர் படத்தை ரசிகர்களுக்கு ஃபேன்பாய் சம்பவமாக கொடுத்தது. இதனால், இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ரஜினி ரசிகர்கள், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர்கள் அப்டேட் செய்து வந்தனர்.

அதன்படி முதல் நாளில் 100 கோடி, இரண்டே நாளில் 300 கோடி, முதல் வாரம் முடிவிற்குள் 500 கோடி வசூல் என செம்மையாக உருட்டி வந்தனர். இதனை ப்ளூ சட்டை மாறன் மட்டும் கடுமையாக ட்ரோல் செய்து வந்தார். ஜெயிலரின் உண்மையான வசூல் நிலவரம் இது அல்ல என்றும், இந்தப் படத்துக்கு பெரியளவில் ஓபனிங் கிடைக்கவில்லை எனவும் கூறி வந்தார்.


இந்நிலையில் நேற்று ஜெயிலர் வசூலை அபிஸியலாக அறிவித்தது சன் பிக்சர்ஸ். அதன்படி இந்தப் படம் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட உலகம் முழுவதும் மொத்த வசூலே 375 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சமூக வலைத்தளங்களில் ஜெயிலர் முதல் வாரம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.


இதனையடுத்து 8வது நாள் வசூல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் நேற்றையை வசூல் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆகமொத்தம் முதல் 8 நாட்களில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement