• Dec 07 2022

பாகுபலி போன்ற உங்க படம் மட்டும் இங்க ஓடணுமா: வாரிசு பட சர்ச்சைக்கு கஞ்சா கருப்பு வெளியிட்ட வீடியோ..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான விஜய்யின் வாரிசு படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆவதில் ஒரு சிக்கல் ஆரம்பித்துள்ளது. 

அதாவது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி ரிலீஸில் முன்னுரிமையையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படுமென தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சீமான் தொடங்கி லிங்குசாமி வரை சினிமா பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த பிரச்சனை பற்றி கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

"நான் தெரியாம தான் கேக்குறேன்.. இங்க ஒரு படம் ஹிட் அனால் அந்த கதையை தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம். நீங்க ஏன் வாரிசு படத்திற்கு தியேட்டர் இல்லை என சொல்கிறீர்கள்."

"உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓட கூடாதா. உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா."

"மரியாதையா வாரிசு படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் பெருமை" என மிகவும் கோபமாக கஞ்சா கருப்பு பேசி இருக்கிறார். மேலும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.