13ம் தேதி நயனின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண் – திரில்லான கதையம்சம் – டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

226

இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படம்
நெற்றிக்கண். அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் கண் தெரியாத பெண் எவ்வாறு வில்லனை எதிர்கொண்டு பழி வாங்குகிறார். என்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடியும்.

மேலும் டிரைலருக்கு கேப்ஷனாக ‛‛இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண் என விளம்பரப்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது. படத்தை வருகிற ஆக., 13ம் தேதி டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.