• Dec 07 2022

அரபிக்குத்து பாடலுக்கு மனைவியிடம் குசும்பு பண்ணிய முதியவர்- வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ

Listen News!
stella / 1 month ago
image
Listen News!


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, VTV கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிய இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. அதிலும் குறிப்பாக, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து பாடி இருந்த "ஹலமத்தி ஹபிபோ" என தொடங்கும் பாடல், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தது


இந்த பாடலில் நடிகர் விஜய்யின் டான்ஸ் தொடர்பான வீடியோக்களை பலரும் நடனமாடி வீடியோக்களாகவும் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்கள். இந்தியாவை தாண்டியும் அரபிக் குத்து பாடல் சக்கை போடு போட்டிருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்த நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


அதாவது மூதாட்டி ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது அரபிக்குத்து பாடல் பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, முதியவர் ஒருவர் அந்த பாடலில் வரும் டான்ஸ் ஸ்டெப் உள்ளிட்டவற்றுடன் சில அசைவுகளையும் சேர்த்து நாற்காலியை சுற்றி நடனமாடுகிறார்.மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.