• Mar 29 2024

ஹேர்ஸ்டைல், பனியன், லுங்கி தவிர வேறு எதுவும் ஒரே மாதிரி இருக்காது- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நானி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய 5 மொழிகளில் நடித்து பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது 'தசரா'. நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகயோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளர்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார் .


இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி தெலுங்கில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஹிந்தியில் 4 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளையும், தமிழில் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.

இந்த மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் வெகமாக நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி லக்னோவில் நேற்று நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் 'தசரா' படத்தைப் பார்ப்பதற்கு 'புஷ்பா' படம் போலவே உள்ளது, நானியின் கதாபாத்திரமும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் போலவே உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த நானி, “இல்லை, ஹேர்ஸ்டைல், பனியன், லுங்கி தவிர வேறு எதுவும் ஒரே மாதிரி இருக்காது. 'தசரா' படம் வெளிவந்த பிறகு இதை 'தசரா லுக்' என்றே சொல்வீர்கள்,” என்றார். தென்னிந்தியப் படங்கள் தற்போது பாலிவுட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதே என்ற கேள்விக்கு, “எனது சிறு வயதில் ஐதராபாத்தில் நிறைய ஹிந்திப் படங்கள் வெளிவரும். இப்போது தெலுங்குப் படங்கள் வட இந்தியாவில் அதிகமாக வெளியாகிறது. அதனால், இரண்டிற்கும் சரியாகப் போய்விட்டது,” என்றார்.


Advertisement

Advertisement

Advertisement