• Mar 28 2024

சன்னி லியோன் என்றால் யாரென்றே தெரியாது- 'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உளறிய ஜி.பி முத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வருபவர் தான் சன்னிலியோன். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஜி.பி முத்து மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஜி.பி முத்து பேசிய விடயங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதாவது அதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு இது என்னுடைய முதல் படமாக இருப்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கு என்றார்.


மேலும் இப்படத்தின் இயக்குநர் சசிகுமார் என்று சரியாக சொன்னார்.ஆனால் தயாரிப்பாளர் பெயர் தெரியாமல் திணறிய போது தொகுப்பாளர் விஜே விஜய் தயாரிப்பாளரின் பெயர் வீரசக்தி சேர் என்று எடுத்துக் கூறினார். அதன் பின்னர் அவருடைய பெயரைச் சொன்ன ஜி.பி முத்து தொடர்ந்து இப்படம் குறித்த சுவாரஸியமான தகவல்களைப் பகிர்ந்தார்.

குறிப்பாக இந்த படத்தில நடிக்கும் போது சன்னிலியோனும் என்னுடன் நடிக்கிறார் என்று சொன்னாங்க. எனக்கு சன்னி லியோன் என்றால் யாரென்று தெரியாது கமெண்ட் எல்லாம் வரும். ஒரு நாள் ஆனந்த் தம்பி சன்னிலியோனின் போட்டோ காமிச்சாங்க அப்பதான் அவங்களையே தெரியும் என்றார்.


மேலும் தொடர்ந்து பேசிய அவர் இப்படத்தில டாக்டர் கேரக்டரில் நடிச்சிருக்கிறேன்.அந்த டாக்டரின் பெயரைக் கேட்டாலே சிரிப்பாக இருக்கு. இருந்தாலும் அதன் பெயர் என்ன என்று சொல்ல மாட்டேன்.படத்தை பார்த்திட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க என்றார்.

மேலும் சன்னிலியோன் கிட்ட ஏதாவது பேசினீங்களா என்று கேட்ட போது அவங்களுக்கு இங்கிலீஸ் மட்டும் தான் தெரியும். அவங்க கிட்ட கூட போகல அவங்க கிட்ட நான் பேசினது இல்ல. அவங்க டான்ஸ் ஆடும் போது ஓரமா நின்று பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். அத்தோடு தான் ஹீரோவாக நடித்தால் கண்டிப்பாக வில்லனாக ஆர்.கே சுரேஷ் நடிக்க வேண்டும் .தாரை தப்பட்டை படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போயிட்டேன் என்றும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement