• Apr 24 2024

படத்திற்கு பூஜையே போடவில்லை..160 கோடியை கடந்து பிஸ்னஸ் வசூல் மழை..மாஸ் செய்யும் விஜய்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் விஜய். அதுமட்டுமல்லாமல் . இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். 


மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். மேலும் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். மேலும் இவர் 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள் என பல விருதுகள் வென்றார்.


இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 உருவாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


மேலும் இப்படத்தில் சஞ்சய்தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பூஜை கூட போடாத இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ரூ. 160 கோடிக்கு தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement