தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும்
அதன்படி தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட்.மேலும் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் விஜய் பற்றி ஒரு கருத்து வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பங்கேற்று பேசிய மதுரை ஆதினம் ‘நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள் என்றும் சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படத்தில் பேசுபவர் நடிகர் விஜய் என்றும் அதனால் அவரது படத்தை பார்க்க வேண்டாமென்றும் மதுரை கூறியிருப்பதற்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- பீச்சில் குட்டை சோட்சுடன் ரட்சிதா வெளியிட்ட வீடியோ-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா விக்ரம் படம்.. வெளியானது தகவல்..!
- இணையத்தில் தீயாய் பரவி வரும் நடிகர் யாஷின் வீடியோ..!
- திருட்டுத்தனமாக கோபியின் போனை எடுத்துப் பார்த்த பாக்கியா– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- உங்களுக்கு பிரச்சனை நிறைய வரும்னு அட்வைஸ் பண்ணாரு விஜய் சேதுபதி – Village Cooking சேனல் வெளியிட்ட வீடியோ…!
- பாக்கியலட்சுமி சுசித்திராவா இது..? சேலையில் இப்படியொரு குத்தாட்டமா…வைரலாகும் வீடியோ..!
- அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!