• Apr 25 2024

தியேட்டர்ல யாரும் உட்காரவே இல்ல- ரஞ்சிதமே' முழு வீடியோவை பார்த்து விட்டு தமன் போட்ட டுவீட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு.இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்குவதோடு தில் ராஜு தயாரிக்கின்றார்.

மேலும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.


இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன், "ரஞ்சிதமே முழு வீடியோ இப்போ தான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உக்காரமாட்டீங்க. டாட். உங்களோடு நானும் ஒரு ரசிகனா" என டுவீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement