• Feb 03 2023

இந்த வாரம் நாமினேஷன் கிடையாது… ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றுங்கள்-அந்த போட்டியாளரை திட்டும் நெட்டிசன்கள்..!

Listen News!
Aishu / 2 months ago
image

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகிய நாள் முதல் அசீம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.முதல் வாரத்தில் இருந்தே சக போட்டியாளர்களுடன் தேவையில்லாமல் சண்டையிட்டு வரும் அசீம், எவிக்சனில் இருந்தும் தப்பித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இதுவரை 50 நாட்களை கடந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமாகிய இந்த சீசனில், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் அசீம், ஷிவின், விக்ரமன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் அதில், அசீம் வெற்றிப் பெற்று பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனால், அவர் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார்.

சும்மாவே காலுக்கு சலங்கை கட்டினது போன்று ஆடும் அசீம், இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் கிடையாது என்பதால் பிக் பாஸ் வீட்டையே அதகளம் செய்து வருகிறார்.அத்தோடு  ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்ட்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.மேலும்  இதில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா, ஏடிகே ஆகியோர் ஏலியன்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். எனினும் இதில், ஏலியன்ஸ் வீட்டில் போய் பூவை திருடி வரும் டாஸ்க்கில் அசீமுக்கும் ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே மோதல் வெடித்தது.

முதலில் ஜனனியுடன் மோதிய அசீமை விக்ரமன், ஷிவின் ஆகியோர் கண்டித்தனர்.அத்தோடு  கடைசியில் அது அசீம் - விக்ரமன் இடையேயான மோதலாக வெடித்தது. சென்ற வாரம் நடந்த நீதிமன்றம் டாஸ்க்கில் தனக்காக வாதடிய அசீமை நல்லவன் என சொன்ன ஜனனிக்கு, இந்த வாரம் அவரே எதிர்பாராத ட்வீஸ்ட் கிடைத்துள்ளது. அத்தோடு நல்லவன் என்று நினைத்த அசீம் வில்லத்தனமாகவும் தவறாக நினைத்த விக்ரமன், ஏடிகே நல்லவர்களாகவும் தெரிகின்றனர். மேலும் ஒருகட்டத்தில் டீமாக விளையாட முடியாது, நான் தனியாக பார்த்துக்கொள்கிறேன் என அசீம் எகிற, மொத்த போட்டியாளர்களும் அவரை சூழ்ந்துவிட்டனர்.

மேலும் ஒவ்வொரு முறையும் தேவையே இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ்களுடன் வம்பிழுத்து வரும் அசீமிடம், "நீ என்ன பெரிய ரவுடியா?" என அமுதவாணன் சண்டைக்கே போய்விட்டார். தொடர்ச்சியாக யாருடைய பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக விளையாடுவதுடன் ஹவுட்ஸ் மேட்ஸ்கள் அனைவரிடமும் அசீம் அத்துமீறி நடந்துகொள்வதும் பேசுவதும் சர்ச்சையாகி வருகிறது. அத்தோடு நேற்றைய எபிசோடில் அசீம் மீது தனலட்சுமி முட்டை அடித்தார். அதன் பின்னர் அதனை மனதில் வைத்துக்கொண்டு, "தனலட்சுமி வெளியே போனதும், சென்னைல இருந்து ஈரோடு வரை மக்கள் முட்டை அடிப்பாங்க" என அவரை சீண்டியதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் ரசிகர்கள் பலரும் அசீமிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement