• Jun 04 2023

இனி AK62 வே வேண்டாம்..அஜித் எடுத்த திடீர் முடிவு ...நடந்தது என்ன..?

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

அஜித் இனி AK62 என தன் படத்தை அழைக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டாராம். AK62 என்றாலே அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணி தான் ஞாபகத்திற்கு வருவதாக அஜித் கருதுகின்றார் என ஒரு தகவல் வருகின்றது

 அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது.அத்தோடு ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனினும் இதைத்தொடர்ந்து அதே வேகத்தில் தன் அடுத்த படத்தை துவங்க திட்டமிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்க இருந்தார் அஜித்.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் விக்னேஷ் ஷிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர்.மேலும் இது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சியாக்கியது.

இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனியை தன் அடுத்த படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்தார் அஜித்.

எனினும் தற்போது கதையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் மகிழ் திருமேனி. அஜித்திற்கு ஏற்றாற்போல செம ஸ்டைலான திரில்லர் ஜானரில் கதையை மகிழ் திருமேனி தயார் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement