• Apr 19 2024

எந்த நடிகரும் என்னை வாழ்த்தவில்லை இது தான் கவலையாக இருக்கின்றது- வருத்தம் தெரிவித்த நடிகர் ஆர் கே சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் தான் ஆர். கே சுரேஷ். இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதனை அடுத்து ஹரஹர மஹா தேவி ,இப்படை வெல்லும், காலி, நம்ம வீட்டுப் பிள்ளை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார்.


அவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் ஒன்று தான் விசித்திரன். இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த நல்ல வரவேற்புக் கிடைத்ததோடு இதுவரை 47 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விசித்திரன் படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. போஜ்புரி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள் என்னைக் கூப்பிட்டு வாழ்த்தி இருந்தனர். ஆனால் தமிழில் இருந்து எந்த ஒரு கலைஞரும் கூப்பிட்டு வாழ்த்தவில்லை எத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement