• Apr 19 2024

குடும்பத்தினருடன் இணைந்து கோலாகலமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிக்கி கல்ராணி- வெளியாகிய போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நிக்கி கல்ராணி. இவர் இதனைத் தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


அதே போல இவருடைய கணவரான ஆதி தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. 


கடந்த ஆண்டு நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் திருமணம் நடந்தது.சில மாதங்களுக்கு முன்பு தம்பதியர் தங்களது திருமணத்தின் 100வது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினர். 


இந்நிலையில் நிக்கி கல்ராணி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, தனது 31-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.தற்போது இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement