விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் புதிய அப்டேட் -குஷியில் ரசிகர்கள்.

813

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது. அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கூட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது.

மேலும் தளபதி விஜய் இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ என்னும் படத்தில் படத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது.

மேலும் இதன்அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தையும் தெலுங்கிலும் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.