• Apr 20 2024

ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் இறைவன் படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்- இவ்ளோ சீக்கிரம் முடிந்து விட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இறைவன் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.என்றென்றும் காதல், மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் 

இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாகவும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

 

Advertisement

Advertisement

Advertisement