• Apr 19 2024

புதிய டாஸ்கால் களைகட்டும் பிக்பாஸ் வீடு-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில் கடந்த வாரம்  பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது.மேலும்  அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின்  இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்... நீங்களும் ஆகலாம் மக்களின் ஸ்டார் டாஸ்க்கில் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு அதில் சிறந்த போட்டியாளர்கள் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

அத்தோடு தேர்வான 5 பேர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கூறிகிறார். அதில் அசீம் போட்டியிடுகிறார். அவர் சிவாஜியாக நடிப்பதை பார்த்து மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை வெகுவாக பாராட்டி அவரை செலக்ட் பண்ணுகிறார்கள். 

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement