பிக்பாஸ் கவினின் ‘லிஃப்ட்’ படத்தின் ரிலீஸில் ஏற்ப்பட்ட புதிய சிக்கல்

256

விஜய்ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின் .இவரது நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் ‘லிப்ட்’ .

திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் ஆக இருந்து 6 மாதங்கள் ஆன நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘லிப்ட்’ படத்தினை ரிலீஸ் செய்வதில் புதிய பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது. இப் படத்தை ஈகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க விநியோக உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

ஆனால் இப்போது இரு தரப்புக்கும் இடையே படத்தின் உரிமை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதில் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது.