விஜய்யின் அடுத்தபடம் பற்றிய வெளியான புதிய தகவல்

108

தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் இளையதளபதி விஜய்.

இவர்நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்து விடும் என்று தான் கூற வேண்டும்.

மேலும் நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம் லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிப்பட்டவண்ணம் உள்ளன. இப்போது புதிய தகவலாக தெலுங்கு சினிமாவில் விஜய் நேரடி என்ட்ரி கொடுக்கப் போவதாக செய்தி கசிந்த வண்ணம் உள்ளது.

மேலும் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தை வம்ஷி பைடிபள்ளி என்பவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதுவரை தான் தயாரித்த படங்களை விட இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவும் தில்ராஜூ திட்டமிட்டிருக்கிறாராம்.

அத்தோடு தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, நாகார்ஜூனா – கார்த்தி நடித்த ஊபிரி (தமிழில் தோழா) போன்ற படங்களை இயக்கி உள்ளார் வம்சி பைடிபள்ளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: