• Apr 20 2024

தளபதி 66 வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பற்றி வெளியாகிய புதிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குவதோடு ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்தது.இந்த நிலையில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் இந்த படத்திற்காக செட் போடப்பட்டு உள்ளதாகவும், அந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. முதல் கட்டமாக விஜய் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றும் அதனை அடுத்து விஜய் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement