முறை மாப்பிளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். தொடர்ந்து இயற்கை, மலை மலை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானார்.
பின்னர் சினிமாவிலிருந்து விலகி மீண்டும் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்றி கொடுத்தார்.தொடர்ந்து குற்றம் 23, தடம், சாஹோ போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் அருண்விஜய் தனது 33வது படமான யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். மேலும்,சமுத்திரக்கனி,யோகி பாபு,சினேகன்,ராதிகா, கங்கை அமரன் மற்றும் கேஜீஃப் புகழ் கருடா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அந்தவகையில் திரைப்படம் மே 6 வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது,இருப்பினும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யானை படத்தினை ஜூலை 1 வெளியிடுவதற்கு படக்குழுவினர் பிளான் செய்து வருகின்றனர்.இந்நிலையில்,இதற்காக நடிகர் அருண் விஜய் மிகவும் வேகமாக பிரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் யானை படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இது சம்மந்தமான போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது யானை படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
- குடும்ப வாழ்க்கையை கணவருடன் என்ஜாய் பண்ணி வாழுறேன்- மீனாவின் வைரலாகும் பேட்டி
- வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்- கேப்டன் விஜயகாந்தின் உருக்கமான பதிவு
- OTT-இல் வெளியாகும் விக்ரம் திரைப்படம்-வைரலாகும் ஆண்டவரின் வீடியோ
- போனில் ஆறுதல் கூறியும் மனம் பொறுக்காமல் மீனாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
- இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது-மீனாவின் கணவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் விஷால்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்