• Apr 19 2024

என்ன ஒரு உருட்டுடா சாமி... தப்பி மிதிச்சிட்டாரு ஆண்டவர்... ஆயிஷாவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6இன் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவர் ஆயிஷா. இந்நிகழ்ச்சியில் சில நேரங்களில் இவர் நடந்து கொள்ளும் விதமும் மக்கள் பலரை முகம் சுளிக்க வைக்கிறது. அந்தவகையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், கமல்ஹாசன், ஆயிஷாவிடம் நீங்கள் ரச்சிதா பொம்மையை எடுத்துக்கிட்டு டால் ஹவுஸ்க்கு போனீங்களா? எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அதகளப் படுத்தி உள்ளார். 


அதுமட்டுமல்லாது "விளையாட ஆசைப்படாத நீங்கள், அசீம் எடுக்க சொன்னார் என்பதற்கான அவருடைய பொம்மையை எடுத்துக்கொண்டு போய்விட்டீர்கள் ஏன்? எனவும் தாறுமாறாக கேட்டிருந்தார். ஆண்டவரின் இந்த அடுக்கடுக்கான கேள்வியால், ஆயிஷாவின் முகம் பல கோணத்திற்கு மாறியதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அத்தோடு உடம்பு முடியல, நான் விளையாட்டுக்கு வரல என திரிந்து கொண்டிருந்த ஆயிஷாவுக்கு ஆண்டவர் சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். மேலும் இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் "சும்மா இன்னசெண்ட் மாதிரி நடிச்சுகிட்டு இருக்கும் ஆயிஷாவை ஒரு மிதி மிதிச்சாரு ஆண்டவர்... Unexpected twist அதான்" எனவும் மாஸாக பதிவிட்டுள்ளனர். 


அதுமட்டுமல்லாது "நீங்க தான் விளையாடவில்லையே, அப்போ எதுக்கு ஆயிஷா ரச்சிதா டாலை நீங்க எடுத்தீங்க... ஐயோ சத்தியமா எனக்கு தெரியாது..இப்பா அது வந்து... நான் என்ன சொல்றது என மாற்றி மாற்றி ஆயிஷா பேசியதையும் ஒரு நெட்டிசன் கிண்டலடித்துள்ளார்.


இவ்வாறாக இவ்வளவு காலமும் உடம்பு முடியல என்று சொல்லி உருட்டிற்று வந்த ஆயிஷாவிற்கு கமல் பதிலடி கொடுத்தமையை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement