• Apr 24 2024

இரண்டாம் தாரமாக திருமணம் செய்யும் ஹன்சிகா-மாப்பிள்ளையின் முன்னாள் மனைவி இவரா-திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஹன்சிகா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹன்சிகாவுக்கு  தமது வாழ்த்துக்களை  கூறி இருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் , ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேல் கத்தூரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



எங்கேயும் காதல் படத்தை போலவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஹன்சிகாவுக்கும் சோஹேல் கதூரியாவுக்கும் நிச்சயதார்த்தமும் இடம்பெற்றது. மேரி மீ என ஹார்டீன் எல்லாம் போட்டு முட்டிப் போட்டு ஹன்சிகாவுக்கு மோதிரம் மாற்றினார் சோஹேல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹேல் கதூரியாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் அதிகாரப்பூர்வமாக திருமண தேதியையும், திருமணம் நடைபெற உள்ள இடத்தையும் ஹன்சிகா அறிவிப்பார் என கூறப்படுகின்றது.


நடிகை ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்யப் போகும் தகவல் அறிந்து பலரும் வாழ்த்தி வந்த நிலையில், சோஹேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட அதிர்ச்சியான தகவல் வீடியோ ஆதாரத்துடன் தற்போது வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில் வேடிக்கை என்னவென்றால், தனது தோழியின் திருமணத்தில் நடிகை ஹன்சிகா கலந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்துள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


அந்த திருமணத்திலும் நடிகை ஹன்சிகாவே டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி ஆகி உளள்ளனர். அந்த மணப்பெண்ணுக்கு எப்படி ஹன்சிகா கூட இருந்தே குழி பறித்து இருக்கிறார் பாருங்க என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அத்தோடு நடிகை ஹன்சிகா முன்னதாக நடிகர் சிம்புவை காதலித்து பிரேக்கப் செய்தது குறிப்பிடத்தக்கது.


ரிங்கி என்பவருடன் சோஹேல் கதூரியாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் விவாகரத்து செய்த நிலையில், தற்போது ஹன்சிகாவை சோஹேல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தோடு நீண்ட நாட்களாகவே இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில் முன்னாள் மனவியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்...






Advertisement

Advertisement

Advertisement