• Mar 28 2024

ரஜினியை காப்பி அடித்து குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்... வீடியோவோடு ஆதாரப்படுத்தி விளாசும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் மட்டுமே ஏறத்தாழ 65இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விஜய்யின் நடிப்பிலும், மற்றும் வம்சியின் இயக்கத்திலும் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, அவர்களோடு இணைந்து சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாது தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது


இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் வாரிசு படம் வழக்கமான விஜய் படமாக இருக்காது என்ற தகவல் தளபதி ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. அதன் பின் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்பை இரட்டிப்பாகியது. 

அதிலும் குறிப்பாக விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல், சிம்பு பாடிய தீ தளபதி பாடல் ஆகிய இரண்டு பாடல்களும் முதலில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தது. அதன் பின் சித்ராவின் குரலில் வெளியான அம்மா பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. 


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமல்லாது வழக்கம் போல விஜய் மிகவும் எளிமையாக அதே சமயத்தில் ஸ்டைலாக விழாவிற்கு வருகை தந்தார். 

அந்தவகையில் விஜய் மேடைகளில் ஏறி இரண்டு ஆண்டுகள் ஆனதால் ரசிகர்கள் அவரை பார்த்தவுடன் ஆர்ப்பரித்தனர். தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் கையசைத்து தன் நன்றிகளை தெரிவித்தார் தளபதி விஜய். இந்நிலையில் வாரிசு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பி எனக் கூறி சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 


அதாவது எனக்கு போட்டியாளர் நான் தான் என விஜய் குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார். இதே கருத்தை பல வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருக்கின்றார். இதை வைத்து ரசிகர்கள் பலர் விஜய் ரஜினியை காப்பி அடித்துவிட்டார் என கூறி வருகின்றனர். அத்தோடு எனக்கு வேறு யாரும் போட்டி இல்லை ,எனக்கு நானே தான் போட்டி என ரஜினி சொல்லிய அதே கருத்தை தற்போது விஜய்யும் கூறியுள்ளதை ரசிகர்கள் வீடியோவோடு ஆதாரப்படுத்தி ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement