தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67
இப்படத்தின் வாயிலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார். இதுவரை காலமும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகமேலே இருந்து வந்தன. இருப்பினும் இந்த வருடத்தின் உடைய இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.
இவ்வாறாக இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள மற்றுமோர் நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வருகின்றது.
Listen News!