• May 29 2023

ஜீவா அப்பாவிடம் மோசமாக திட்டு வாங்கிய நயன்தாரா..காரணம் சிம்புவா? நடந்தது என்ன?

Jo / 1 week ago

Advertisement

Listen News!

ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர் தான் நயன்தாரா. அதன்பின் தமிழில் நடிக்க ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

அவ்வாறு 2006ல் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தின் வெளிவந்த படம் தான் ஈ.இப்படத்தில் ஜீவா மற்றும் நயன்தாரா நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தை ஜீவாவின் தந்தையான ஆர் பி சௌத்ரி தயாரிப்பை மேற்கொண்டு இருப்பார். இந்த காலகட்டத்தில் தான் நயன்தாராவிற்கும் சிம்புவிற்கும் இடையே காதல் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து ஈ படப்பிடிப்பின் போது, நயன்தாரா ஷூட்டிங்கிற்கு சரியாக வராமல் இருந்திருக்கிறார். மேலும் அப்படியே வந்தாலும் போனும் கையுமாகவே எந்நேரமும் சிம்புவுடன் சிரித்து, அல்லது அழுது பேசி வருவாராம். அதை அறிந்தும் அறியாத மாதிரி இருந்து வந்திருக்கிறார் ஆர் பி சௌத்ரி.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதலை அறிந்து பிறகு கோபம் கொண்ட இயக்குநர் தன் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் நயன்தாராவை குற்றம் சாற்றி இருக்கிறார். மேலும் அவரிடம் உங்களால் இப்படத்தை முடித்து தர முடியுமா, முடியாதா என்று கேட்டிருக்கிறார்.அவ்வாறு உங்களால் முடியாது என்றால் பரவாயில்லை. இனி நான் நடப்பதை பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். இது நயன்தாராவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் அக்காலக் கட்டத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் தான் ஆர் பி சௌத்ரி. இவர் இவ்வாறு கூறியதால் பயம் கொண்டு படத்தினை முடித்து கொடுத்தாராம் நயன்தாரா. 


Advertisement

Advertisement

Advertisement