• Apr 25 2024

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நயன்தாரா..! கனெக்ட்' படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் அஸ்வின் சரவணன். இவரது இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடித்து வரும் திரைப்படம் தான் கனெக்ட்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் டீசரை 18 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இது தவிர நயன்தாரா இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் நயன்தாரா அண்மையில் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றதன் காரணமாக ஷுட்டிங் தவிர்ந்த நாட்களில் அவர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement