• Apr 24 2024

கிழிந்த பேன்ட்டில் கணவர் விக்கியுடன் மும்பை ஹோட்டலுக்கு சென்ற நயன்! வைரல் போட்டோஸ் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், தன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

 திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது தென்னிந்திய திரை உலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.  நயன்தாராவை வைத்து 'ராஜா ராணி' படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள ஜவான் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அட்லீ ஹிரோவாக அறிமுகமானபோது, நயன்தாராவின் செண்டிமெண்ட் ஒர்க்அவுட் ஆனது போலவே... பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் போதும் இவருடைய அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கும் என்பதனாலேயே... நயன்தாராவை கமிட் செய்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஆறு மாதமாகவே ஒரு சில பிரச்சினைகளையும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த பிரச்சனையில் இருந்து நயன்தாரா மீண்ட பிறகும், அடுத்தடுத்து சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.  குறிப்பாக நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க இருந்த 62 ஆவது படம் அவருடைய கையை நழுவி போன நிலையில், நயன்தாராவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருந்த இரண்டு படங்கள் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும் தற்போது தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் நயன்தாரா இருப்பதால், ஜவான் படத்திற்காக வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement