• Apr 19 2024

'ஏகே 62' இல் அஜித்திற்கு ஜோடி நயன்தாரா இல்லையாம்... அப்போ யார் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் அஜித். இவர் அதிகளவில் வெற்றிப் படங்களை கொடுப்பதாலோ என்னவோ தெரியவில்லை இவரை எப்போது ரசிகர்கள் 'தல' என்று தான் செல்லமாக அழைப்பார்கள். 


இந்நிலையில் 'துணிவு' படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் 'ஏகே 62'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனிருத் இசையமைக்கிறார். 

அதிகளவிலான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியானது. அதே போல் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் எனவும் ஏற்கெனவே கூறப்பட்டது.

 

ஆனால் தற்போது இப்படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் இப்படத்தில் பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து கதாநாயகியாக திரிஷா கமிட்டாகியுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


அதுமட்டுமல்லாது இப்படத்தில் கருப்பு முடி, கருப்பு தாடி என மாஸ் லுக்கில் அஜித் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் பொறுத்திருந்து பார்ப்போம் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பதை.

Advertisement

Advertisement

Advertisement