• Apr 20 2024

ஷுட்டிங் பிஸியிலும் கணவருடன் சி.எஸ்.கேவின் ஆட்டத்தை பார்க்க வந்த நயன்தாரா- இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறாங்க தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

சென்னை சேப்பாக்கம் என்றால் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இல்லாமல் எந்த போட்டியும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைவரிடமும் உள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. 

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவில்லை. மாறாக, கேமரூன் க்ரீன் மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இதில், கேமரூன் க்ரீன் 6 ரன்களில் வெளியேற, இஷான் கிஷான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.


இதையடுத்து நேஹல் வதேரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் சேர்த்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய நேஹல் வதேரா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதம் அடித்து 64 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 20, டிம் டேவிட் 2, அர்ஷாத் கான் 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.


பின்னர், எளிய நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது . இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை பார்ப்பதற்காகவே சினிமா பிரபலங்கல் பலரும் சென்னை சேப்பாக்கம் வந்துள்ளனர். இதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் வந்துள்ளனர்.


நயன்தாரா நடிப்பில் ஜவான், இறைவன், டெஸ்ட் மற்றும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். தனது பிஸியான ஷெடியூலிலும் சென்னை போட்டியை கண்டு ரசித்துள்ளார். தோனி மனைவி சாக்‌ஷி மற்றும் அவரது மகள் ஜிவா ஆகியோர் போட்டியை பார்ப்பதற்கு வந்துள்ளனர். இவ்வளவு ஏன், அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்து போட்டியை கண்டு ரசித்துள்ளார். அவர் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து இந்தப் போட்டியை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement