• Feb 02 2023

'கனெக்ட்' படம் பார்த்துக் கன்பியூஸான நயன்.. கடைசியில அதைக் கூட மறந்திட்டாங்களாம்..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. தற்போது அவர் நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் வரும் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதாவது ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். 


மேலும் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று சென்னையில் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நயன் - விக்கி தம்பதியினர் ஜோடியாக கலந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் விக்னேஷ் சிவனை வைத்துக் கொண்டே நயனிடம் 'ஐ லவ் யூ' மேடம் என ரசிகர் ஒருவர் கூறினார். இதனால் அந்தக் கூட்டத்தில் ரசிகர்களினால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இருவரும் ஜோடியாக படம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.


அப்போது விக்கி - நயன் இருவரையும் சூழ்ந்துகொண்ட பலரும் அவர்களை புகைப்படம் எடுத்து தள்ளினர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேநேரம் 'கனெக்ட்' படம் பார்த்து சற்றுக் கன்பியூஸ் ஆன நயன், தனது செல்போனை மறந்துவிட்டு வந்து விட்டார்.


அதாவது செல்போனை மறந்து திரையரங்கிலேயே வைத்து விட்டது கூட தெரியாமல் காரில் ஏறிவிட்டார் நயன். ஆனால், நயனின் செல்போனை பவுன்சர் ஒருவர் எடுத்துக்கொண்டு அவர்களின் காரை நோக்கி வேகமாக ஓடிச் செல்கிறார். 


அதன் பின்னர் அந்த செல்போனை நயனிடம் கொடுக்கவும், அவர் அதனை க்யூட்டாக வாங்கிக் கொண்டதாகவும், இதனையடுத்து நயன் - விக்கியின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement