• Apr 01 2023

இரட்டை குழந்தைகளுடன் நயன் மற்றும் விக்கி...எங்கு சென்றுள்ளார்கள் தெரியுமா..தீயாய் பரவும் வீடியோ...!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் திருமணமான 4 மாதத்திற்குள் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்.வாடகைத்தாய் மூலமாக தான் இந்த குழந்தையை இவர்கள் பெற்றுகொண்டார்கள் என அதன்பின் தெரியவந்தது. இதனால் சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது.

இதனால் பல பிரச்சனைகளையும் இவர்கள் சந்தித்தார்கள். அனைத்து பிரச்சனைக்கும் முடிவு கட்டிவிட்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுடைய மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை.இவ்வாறுஇருக்கையில் முதல் முறையாக அவர்களுடைய வீடியோ வெளிவந்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement

Advertisement