• Apr 20 2024

விடுதலை பட சூட்டிங்கிற்கு வந்த தேசிய விருது பெற்ற இயக்குநர்- வைரலாகி வரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவருடன் விஜய்சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.


இப்படம் வருகின்ற 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் விடுதலை படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு பிரபல இயக்குநர் சுதா கொங்கரா சென்றுள்ளார்.அங்கு அவர் வெற்றிமாறனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இப்புகைப்படம் வைரலாகி வருகின்றது.


மேலும் இப்படம் இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement