• Apr 24 2024

மகளுக்கு 14வயதில்.. 2ஆவது குழந்தைக்கு தந்தையான நரேன்... வெளியானது மகனின் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற திரைப் பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் நரேன். இவர் மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து 'பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார்.


மேலும் இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கைதி, விக்ரம்' ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.


நடிகர் நரேனின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்மயா எனும் ஒரு அழகிய மகளும் உள்ளார்.


இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நரேன் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று நரேன் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இதில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் நரேன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement

Advertisement