• Apr 16 2024

நாங்க அப்போ நல்லா பண்ணலையா- ஆயிஷாவை வெட்கப்பட வைத்த பிக்பாஸ்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இந்த வீட்டிலிருந்து நிவாஷினி வெளியேறியிருந்தார். இதனை அடுத்து தற்பொழுது 15 பேர் மாத்திரமே வீட்டுக்குள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெற்றது.அதில் மைனா நந்தினி தலைவர் ஆகியதால் கடுப்பானதனலக்ஷ்மி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சண்டை எல்லாம் போடுகின்றார். இதனால் இந்த வாரம் பெரிய சண்டை இருக்கு என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதால் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக தமக்கு பிடிக்காதவர்களை நாமினேட் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் ஆயிஷா லிவிங் ஏரியாவில் வந்து இருக்கும் போது பிக்பாஸ் உங்கள் ஆடை நன்றாக இருக்கு என்று கூறகின்றார். இதனால் ஆயிஷா வெட்கப்பட்டு சிரிக்கின்றார்.இதனால் கடுப்பான தனலக்ஷ்மி அப்போ நாங்க எல்லாம் நல்லா இல்லையா என்று கேட்டுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement