தமிழில் பிரபல்யமான சின்னத்திரை நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் நாகசைத்தன்யா- அட இந்த நடிகையுடனா?

1103

தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக உயர்ந்த பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் நாகசைத்தன்யா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவின் மகன் என்பதோடு தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அத்தோடு இவர் நடிகை சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெறப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இருவரும் அவரவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகசைதன்யா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் . அந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்த நிலையில் நாகசைதன்யா அடுத்ததாக ஒரு வெப்தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரை விக்ரம் குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் குமார் ஏற்கனவே யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொடரில் நாக சைதன்யா ஜோடியாக சின்னத்திரை நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.