• Apr 25 2024

முன்னாள் காதலி சமந்தாவுடன் கார் ரேசில் கலந்து கொண்ட நாக சைதன்யா- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் நானசைத்தன்யா மற்றும் சமந்தா.இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் காதலித்து வந்தார்கள்.

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இருவரும் கருத்து  வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.


 சமந்தாவுடன் எடுத்த திருமணம் மற்றும் அதன்பின் எடுத்த புகைப்படங்களை இருவரும் நீக்கிவிட்டனர்.ஆனால் நாக சைதன்யா சமந்தா தன் காதலியாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை நீக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் நாக சைதன்யா கார் ரேஸில் ஆர்வம் கொண்டிருந்த போது காதலியாக இருந்த சமந்தாவுடன் காரில் பக்கத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி மீண்டும் இணையுங்கள் இருவரும் என்று கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement