• Mar 28 2024

வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் ரிலீஸ்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குநர் வெங்கி அர்லூரி இப்படத்தை இயக்கி உள்ளார்.

 இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அத்தோடு இப்படம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இப்படத்தில் இடம் பெறும் நாடோடி மன்னன் என்னும் பாடல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement