• Apr 19 2024

துணிவு படத்தின் டிக்கெட்களை பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள்- ரசிகர் மத்தியில் ஏற்பட்ட பரபரப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் நாளை வெளியாகிறது. அதன் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணிக்கே பல திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், முத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாகயுள்ளது.


 இதனால் முன்கூட்டிய ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் அஜித் நற்பணி மன்றத்தில் வைத்திருந்த துணிவு படத்தின் டிக்கெட்களை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

மேலும் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான வலிமை படம் சொதப்பிய நிலையில், துணிவுடன் மீண்டும் ரசிகர்களுக்காக வர காத்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல இயக்குநர் வினோத் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement