• Apr 20 2024

விக்ரம் படக்குழு எடுத்த முடிவால் மைனா ரசிகர்களுக்கு அதிர்ச்சி-மிஸ் பண்ணிட்டாங்களேப்பா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படம் கடந்த 3-ஆம் திகதி வெளியானது.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குநர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். இந்த நிலையில் விக்ரம் படத்தில் டெலிட் ஆன காட்சி குறித்து நடிகை மைனா நந்தினி பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…, விக்ரம் படத்தில் நான், விஜய் சேதுபதி விஜய் சாருடன் நடித்த சில காட்சிகள் டெலிட் ஆகி இருக்கிறது. நான் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருப்பேன். விஜய் சேதுபதி கேட்டிருப்பார். ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கொடுக்கணும் அவ்வளவு கொடுக்கணும் என்ற சொல்லி கொண்டு இருக்கும் போது சிவானி வருவார். இந்த மூன்றாவதுக்கு பத்து லட்சம் என்று சொல்லுவேன். அந்த காட்சியை நீக்கி விட்டார்கள்.

மேலும் அதேபோல் கப்பலில் ஒரு ட்ரமுக்குள் ஒருவரை கொன்று விஜய் சேதுபதி சார் போட்டு வைத்து இருப்பார். அப்போது நான் அவருக்காக மீன் வறுத்து கொண்டு இருப்பேன். அவரைக் கொன்று விட்டு உடனே விஜய் சேதுபதி சார் என் பக்கத்தில் உட்கார்ந்து ரொமான்ஸாக மீன் சாப்பிடுவார். அந்தக் காட்சியும் டெலிட் செய்து இருந்தார்கள். இருந்தாலும் விஜய் சேதுபதி, கமல், பகத் பாசிலுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது என்று கூறி இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement