• Mar 23 2023

"என் பணத்தைப் பறித்து விட்டார்கள் ஆண் விபச்சாரிகள்".. பல ஆண்களால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை புலம்பல்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

குறிப்பாக 1990களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சர்மிளா. அந்தவகையில் ஓவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


சுமார் 38படங்களிற்கும் அதிகமாக நடித்து வந்தவர் இவர், தற்போது சினிமா வாய்ப்பு இல்லாததால் கிடைக்கிற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சர்மிளா, தனது தற்போதைய நிலை குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். 


அதாவது அதில் " நான் சினிமாவில் வந்த போது கிளாமர் ரோல்களில் நடித்தால் பாப்புலர் ஆகிவிடலாம் என்று பலரும் எனக்கு கூறினார்கள். ஆனால் எனக்கு அந்த மாதிரி நடிக்க எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. என்னுடைய அப்பா மறைந்த பிறகு தான் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தெரியவந்தது. என்னுடைய அப்பா என்னை சரியாக வளர்க்கவில்லை" என்றார்.


மேலும் "நான் சம்பாதிக்கும் பணத்தை என்னிடமே வைத்துக்கொள்ள சொல்லிவிடுவார். அதனால் பணத்திற்காக பல ஆண்கள் காதலிப்பதாகக் கூறி என்னிடம் மோசமாக நடந்து கொண்டு பணத்தை பறித்து விட்டனர். அவர்கள் எல்லாம் ஆண் விபச்சாரிகள்? என்றும் அவர்களை சாடியுள்ளார்.


மேலும் தான் கடைசி வரை பார்க்க கூடாது என நினைக்கும் நபர் தனது முதல் கணவர் கிஷோர் சத்யாதான் என்றும், அவர் கரம் வைத்து தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் விளாசியுள்ளார் நடிகை சர்மிளா.

Advertisement

Advertisement

Advertisement