• Apr 01 2023

இந்த விஷயத்தில் நானும் என் கணவரும் வெளிப்படையாக இருக்கின்றோம்.. காஜல் அகர்வால் ஓபன் டாக்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தனது அழகினாலும், நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்து வந்தார்.


இவ்வாறு சினிமாவில் படு பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்தும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்கிறார். 


இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் "திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?" என்று காஜல் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் "நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம். 


காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் நான் நெருங்கித்தான் நடிக்க வேண்டும். அப்படி நடிக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியாது. திருமண வாழ்க்கையும், செய்யும் தொழிலும் வேறு வேறு. ஆனாலும் கவர்ச்சி காட்சி கதைக்கு தேவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான அம்சம். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு நான் எனது செயல்கள் மூலம் பதில் அளித்து இருக்கிறேன். அதேபோன்று தான் இதுவும்" எனக் கூறி இருக்கின்றார் காஜல் அகர்வால்.

Advertisement

Advertisement

Advertisement