• Jun 04 2023

நண்பனே போய்ட்டான் எனக்கு எதுக்கு குடை அதை மடக்கு- சரத்பாபு வீட்டில் அப்செட்டான ரஜினி- கவலை தெரிவிக்கும் ரசிகர்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சரத்பாபுவின் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 கிண்டியில் உள்ள மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.மேலும், பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே சரத்பாபுவும் நானும் நண்பர்கள். நாங்க இருவரும் இணைந்து நடித்த முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் என எல்லா படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன.


நான் சிகரெட் சாப்பிடுவது அவருக்கு சுத்தமா பிடிக்காது, நான் வாயிலே சிகரெட் வச்சாலே தட்டி விடுவார். எப்போதுமே சிரித்த முகத்துடன் அனைவரிடத்திலும் பேசி பழகக்கூடிய நல்ல மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன் என தனது இரங்கலை தெரிவித்தார் 

 ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசப் போவதை அறிந்ததும் அவரது உதவியாளர் உடனடியாக குடையை எடுத்து வெயில் வாட்டாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்து பிடித்தார்.ஆனால், அதை நோட் பண்ண ரஜினிகாந்த் நண்பர் உயிரிழந்த நிலையில், வேதனையில் வாடி வரும் நிலையில், தனக்கு எதுக்கு குடை, மடக்கி வைங்க என உதவியாளருக்கு புரிய வைக்க குடையுடன் அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.


சூப்பர் ஸ்டார் ஆக ரஜினிகாந்த் இருந்தாலும், இப்படி இருக்கும் எளிமை தான் அவருக்கு இத்தனை கோடி ரசிகர்களை சேர்த்துள்ளது என ரஜினி ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement