• Apr 17 2024

வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்- கேப்டன் விஜயகாந்தின் உருக்கமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

90கிட்ஸின் பேவரிட் நடிகையாக வலம் வரும் தான் மீன. தனது பார்வையினாலே பல ரசிகர் பட்டாளத்தைக் கட்டிப் போட்ட இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கன்னடம் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தொழிலதிபராகிய வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. நைனிகா தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளார். இதனால் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜயகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி IPS, வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஓட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement