இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் செல்பி எடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா

127

தமிழ்த் தொலைக்காட்சிகளில் தற்பொழுது சன் தொலைக்காட்சியும் புதுப்புது சீரியல்கள் மற்றும் புதுப்புது ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றது.அந்தவகையில் சன் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி.

இதில் கதாநாயகியாக கேபிரியல்லா என்பவர் நடித்து வருகிறார். இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப் போவது யாரு சீசன் 5ல்போட்டியாளராகப் பங்கு கொண்டதன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரி சீரியலில் நடிகை கேபிரியல்லா நடித்து வருவதால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார்.அத்தோடு trpயில் போட்டி போடும் அளவுக்கு இச்சீரியலும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

மேலும் நடிகை கேபிரியல்லா இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.

சமூக ஊடகங்களில்: