• Apr 24 2024

நடிகர் பிரேம்ஜிக்கு திடீரென விலையுயர்ந்த பரிசளித்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா- கடுப்பான வெங்கட் பிரபு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசைஞானி இளையராஜா. இவரின் இளைய மகன் தான் யுவன் ஷங்கர் ராஜா, அரவிந்தன் படம் மூலமாக தன்னுடைய 16 ஆவது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து இருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில்  வெளியான தீனா திரைப்படமே ஆகும்.இதனைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா  இதுவரை 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.


1997 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான அறிமுகம் ஆன யுவன், இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

யுவன் தனது இசையில் மெலடி, சோகப்பாடல்கள், குத்துப்பாடல்கள் என எல்லா வகையிலும் ஹிட்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக யுவனின் பின்னணி இசையமைப்புகளும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தவை.

இந்நிலையில் தனது தம்பியும் சித்தப்பா மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு பரிசாக புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜிக்கு பரிசளிக்கும் போது வெங்கட் பிரபு சோகமான ரியாக்ஷன் கொடுப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement