ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!!

127

தீனா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த படத்துக்குப் பிறகு, ரமணா,7ஆம் அறிவு, கஜினி, கத்தி, துப்பாக்கி, சர்க்கார் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து விஜய்க்கு ஒரு கதை கூறினார். அந்த கதை விஜய்க்கு பிடிக்காமல் போனதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை.

பிறகு, விஜய்யின் 65வது பட வாய்ப்பு நெல்சனுக்கு போனது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜூராசிக் பார்க் பட ஸ்டைலில் ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்ட ஒரு படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.