• Mar 28 2023

ஜுவாவை அவமானப்படுத்திய மூர்த்தி- கோயிலுக்குச் சென்ற மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காத்திருந்த அதிர்ச்சி

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கதிர், மற்றும் ஜுவா, கண்ணன் ஆகிய மூவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஜுவா கண்ணனை கடைக்கு வரச் சொல்லி அழைக்க கண்ணன் மறுப்புத் தெரிவித்து விடுகின்றார். அத்தோடு தான் கவர்மென்ட் வேலை செய்யிறேன் எதுக்கு கடைக்கு வரணும் என்று சொல்லி விட்டு செல்கின்றார்.


தொடர்ந்து மாங்காய் விற்கும் பெண் ஒருத்தி வந்து வீட்டில் இருக்கும் அனைவரக்கும் மாங்காய் கொடுக்க அனைவரம் வாங்கி சாப்பிடுகின்றனர். பின்னர் மீனாவும் ஐஸ்வர்யாவும் கோயிலுக்குச் சென்று திரும்பி வரும் போது இரண்டு பெண்கள் இவர்கள் இருவரையும் பார்த்து ஏதோ சொல்லி சொல்லி சிரிக்க மீனா என்ன என்று கேட்கிறார்.

அதற்கு அவர்கள் உங்க வீட்டில மூன்று பேர் மாசமா இருக்கிறாங்களாமே என சொல்ல இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர்.பின்னர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வீட்டுக்கு வருகின்றனர்.வீட்டிற்கு வரும் போது இருவரும் சிரித்துக் கொண்டே வருவதால் தனமும் கண்ணனும் என்ன என்று கேட்க இருவரும் நடந்ததைச் சொல்கின்றனர்.


தொடர்ந்து கடையில் ஜுவா மூர்த்தியிடம் கண்ணன் கடைக்கு வந்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல மூர்த்தி முகத்தில் அடித்த மாதிரி கதை சொல்கின்றார். அத்தோடு உன்னை மாதிரி கதிர் என்றால் யாரையும் எதிர்பார்க்காமல் செய்வான் நீ தான் இப்படி கூறிட்டே இருக்கிற என்று கூற ஜுவாவின் முகம் மாறுகின்றது. இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement