• Mar 27 2023

திடீரென சம்பளத்தை உயர்த்திய மிருணாள் தாகூர்.. அதுவும் இத்தனை கோடி தெரியுமா?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான 'சீதா ராமம்' என்ற படத்தில் சீதாவாக நடித்து பல ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படத்தில் துல்கர் சல்மானிற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

சினிமாவில் மட்டுமன்றி இந்தியில் 'கும் கும் பாக்யா' என்ற பிரபலமான டெலிவிஷன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இதனையடுத்து பாலிவுட்டில் மட்டுமே இவருக்கு ரசிகர்கள் இருந்த நிலையில், 'சீதா ராமம்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

தற்போது இவர் தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.


நடிகை நயன்தாராவுக்கு அடுத்த படியாக மிருணாள் தாகூர் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.




Advertisement

Advertisement

Advertisement