• Apr 20 2024

மம்மி, டாடியை விட பையன் ரொம்ப அழகாக இருக்கானே…சினேகாவின் மகனா இது..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகிற்குப் பேர் போனவர்கள் அதிகளவானோர் உண்டு. ஆனால் சிரிப்பிற்குப் பேர் போனவர் என்றால் அது நம்ம சினேகா தான். இவரது நடிப்பையும் தாண்டி சிரிப்பிற்கு அடிமையான இளைஞர் கூட்டம் தான் அதிகம்.

நடிப்பு, நடனம், அழகு என அனைத்து விதமான நயனமும் கொண்டு விளங்குகின்ற இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் டென் நடிகைகளில் ஒருவராக இருந்திருக்கின்றார். இவர் நடித்த படங்களோ ஏராளம். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரசன்னா. சினிமாத் துறையை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் மகன் விகானின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்கு நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் தமது மகன் விகானின் சமீபத்தியப் புகைப்படங்களைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார்.

இப்புகைப்படங்களில் விகான் மம்மி, டாடியை மிஞ்சும் அளவிற்கு ரொம்பவே அழகாக இருக்கின்றார். அதுமட்டுமன்றி தகப்பனின் உயரத்திற்கு ஏற்ப நாளொரு வண்ணமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் சில வருடங்கள் சென்ற பின்னர் பிரசன்னாவை விட மகன் விகான் உயரமாக வளர்ந்து விடுவார் எனக் கூறி வருகின்றனர். அத்தோடு அப்புகைப்படங்களை தமது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இவரின் பிறந்தநாளிற்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement